Sunday, June 13, 2010

என்னைக் கவர்ந்த ஹைக்கூக்கள்

கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று ஹைக்கூ. எளிமையான வார்த்தைகள் மற்றும் ஆழமான அர்த்தங்களால் கவிதை மேல் நாட்டம் இல்லாதவர்களைக் கூட ஹைக்கூ கவிதைகள் வசீகரிக்கும். அந்த வகையில் நான் ரசித்த சில ஹைக்கூக்கள்

சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

யெஸ். பாலபாரதி

இடுகாடு
நிற்கும் பிணம்
பட்ட மரம்

-திருக்குவளை அறிவழகன்

வயல்வெளிகளில்
நிறைய முளைக்கின்றன
கட்டிடங்கள்

-செல்வ ஸ்டீபன்

உதிர்ந்த சருகுகள்
மீண்டும் கிளையில்
குருவிக்கூடு

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்

-கவிக்கோ அப்துல் ரகுமான்

நடு பகல்
சுடு மணல்
பாவம்.. என் சுவடுகள்

-அறிவுமதி

திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு

-குடந்தை அன்புமணி

விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்

-பாக்யாவில் பிரசுரமான என் முதல் கவிதை.

நன்றாக இருக்கிறதா?
உங்கள் கருத்துக்களையும் ஹைக்கூக்களையும் எழுதுங்கள் நண்பர்களே

8 comments:

  1. விடிந்த பிறகும்
    மறையாத விண்மீன்கள்
    குடிசையின் விரிசல்கள்

    மிக மிக அற்புதம்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பர் வேல் தர்மா அவர்களே

    ReplyDelete
  3. உங்கள் கவிதை அழகு...

    ReplyDelete
  4. தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களே!

    ReplyDelete
  5. உங்கள் கவிதை அருமை..

    ReplyDelete
  6. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் ரிஷபன்

    ReplyDelete
  7. மிக அருமையான கவிதைகள்..

    ஆனால் இவற்றில் சில ஹைக்கூ என்ற இலக்கணத்திற்குள் வராது.. ஹைக்கூ என்ற அடையாளம் இல்லாமலும், ஜொலிக்க கூடிய கவிதைகளை தொகுத்த உங்களுக்கு பாராட்டுகள்.. இந்த தொகுப்பில் , ஹைக்கூ இலக்கணத்துக்குள் வரும் கவிதைகளும் உள்ளன.. அருமை... தமிழால் எதுவும் முடியும் என்பதை இந்த கவிதகள் உணர்த்துகின்றன.. இதில் இடம் பெற்று இருக்கும் அனைத்து கவிஞர்களையும் வணங்கி மகிழ்கிறேன்

    ReplyDelete
  8. நண்பர் பார்வையாளன்,
    இவற்றில் எவை ஹைக்கூ இலக்கணத்திற்கு பொருந்தும் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே..
    தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி!

    //அனைத்து கவிஞர்களையும் வணங்கி மகிழ்கிறேன்//
    வாழ்த்தினால் போதுமே,
    வணக்கம் இறைவனுக்காகட்டும்!

    ReplyDelete