Wednesday, June 16, 2010

மது நேசர்களே.. உங்கள் கல்லீரலைப் பாருங்கள்.!

அடிக்கடி மதுவோடு குடித்தனம் நடத்துபவரா நீங்கள்? கொஞ்சம் இருங்க. உங்கள் கல்லீரல் என்ன நிலைமையில் உள்ளது என்பதைப் பாருங்கள். பிறகு தொடர்ந்து குடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதலில் கல்லீரலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் நீர்மம் சுரக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்.

நாம் சாப்பிடும் சைவ அசைவ போன்ற எந்த உணவையும் செரிக்க வைப்பதற்குத் தேவையான பித்த நீரை உருவாக்குவது கல்லீரலின் முக்கியப் பணியாகும். இது மட்டுமின்றி இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை சுத்தம் செய்வது, இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, புரதப் பொருட்களை உண்டாக்குவது, உணவிலுள்ள நச்சுப் பொருட்களை சீர் செய்வது போன்ற பணிகளையும் செய்கிறது. இதனால்தான் கல்லீரலை வேதி தொழிற்சாலை என்று கூறுவர்.

மதுவிலுள்ள ஆல்கஹாலை அகற்றுவதற்காக கல்லீரல் கடுமையாகப் போராடும். அடிக்கடி மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைகிறது.


மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஆரோக்கியமான கல்லீரல் எப்படி அழகாக அல்வா துண்டு மாதிரி இருக்கிறது, ஆல்கஹாலில் ஊறி நாசமடைந்த கல்லீரல் பார்க்கவே விகாரமாக இருக்கிறதல்லவா?

கல்லீரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? தன்னுடைய கெட்டுப் போன அல்லது சிதைந்த திசுக்களை தானே மீளுருவாக்கம் செய்து கொள்ளும் தன்மையுடையது. ஆகவே அளவு மீறி மது அருந்தும் நண்பர்களே இப்போதிருந்தே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டால் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கலாம். இல்லையென்றால் கல்லீரல் கெட்டு கல்லறை பக்கமாகி விடும்..!

4 comments:

  1. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுக் கல்லீரலில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்து விட்டால் கூட நன்றாக உயிர் வாழலாம்.
    கல்லீரல் எவ்வளவோ தாங்க்கக் கூடியது.
    ரத்தப் பரிசொதனையிலோ, குடியால் மஞ்சல் காமாலை வருவதோ மிகவும் பாதிக்கப்பட்ட பின்னர் தான்.
    வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்பது கல்லீரலுக்குப் பொருந்தாது.அதற்குச் சரியான பரிசோதனை ஆரம்பத்திலேயே கண்டறிய இதுவரைக் கிடையாது.
    குடியில்லாமல் முப்பது நாள் இருந்து பாருங்கள்.முடியவில்லையா , பேசாமல் மருத்துவ உதவியை நாடி குடியை விட்டு விடுங்கள்.இல்லையோ ஒரே வழி தான்!காடு தான் !
    நீங்கள் குடிகாரரா இல்லையா?
    இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லிப் பாருங்கள்.
    1.உங்கள் குடும்பத்தினர் நீங்கள் குடிப்பது பற்றிக் கவலை ,அவமானப் படுகிறார்களா?
    2.குடிக்க வேண்டும் என்ற வெறி இருக்கின்றதா?
    3.வேலையில், வீட்டில், உறவில் ,பணத்தில் குடியால் தொந்தரவு இருக்கிறதா?
    4.குடித்து விட்டு என்ன செய்தோம் என்று தெரியாமல் மறந்து விட்டதுண்டா?
    5.கீழே விழுதல், விபத்துக்கள் நடந்துள்ளதா?
    6.குடிப்பதை நிறுத்த வேண்டும், குறைக்க வேண்டும் ஆனால் முடிய வில்லை என்று நினைக்கின்றீர்களா?

    ஆம் என்று ஏதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் கூட நீங்கள் குடிக்கு அடிமையாகி ஈரலையும்,உயிரையும் மற்ற பல வற்றையும் இழக்கலாம்.
    நல்ல மருத்துவ உதவி உள்ளது,உடனே நாடுங்கள்.
    குடி ஒரு குடும்ப நோய். மன நோய்.மறைப்பதில் யாருக்கும் பயனில்லை.

    ReplyDelete
  2. சமூக அக்கறையோடு என் பதிவை விட அதிக தகவல்களோடு கருத்திட்ட நண்பருக்கு மிக்க நன்றி. தங்கள் பெயரைக் குறிப்பிட்டுருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே.!

    ReplyDelete
  3. மனித நேயமுள்ள பதிவு..

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ரிஷபன் அவர்களே

    ReplyDelete