Wednesday, May 25, 2011

கருங்காலி

கருங்காலி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் காட்டிக் கொடுக்கும் கயவர்கள், கூட இருந்து குழி பறிப்போர், நம்பிக்கை துரோகிகள் இதெல்லாம் நம் நினைவுக்கு வரும். கருங்காலி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த ஒரு சிறு ஆய்வு

கருங்காலி என்பது ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு வகை மரம்.

கருங்காலி மரம்

இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.

கருங்காலி மர இலைகள்

அதெல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்புமிக்க கருங்காலி எப்படி துரோகிகளுக்கு அடைமொழியானது என்று கேட்கிறீர்களா?

மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடரி இருக்கிறதல்லவா? அதன் கைப்பிடி உறுதியாக இருப்பதற்காக பெரும்பாலும் இந்த கருங்காலி மரக் கட்டைதான் பயன்படுத்தப்படுகிறதாம். அதாவது தன் இனத்தை அழிப்பதற்கு தானே காரணமாக அமைகிறதாம் இந்த கருங்காலி. இதனால்தான் துரோகிகளுக்கும் இப்பெயர் கூறும் வழக்கம் வந்ததாம்.

காலங்காலமாக இந்த யூதாஸ்களும் எட்டப்பர்களும் தலையெடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம்?
கீழேயுள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

கருங்காலியில் செய்யப்ட்ட நாற்காலி

கருங்காலியில் செய்யப்பட்ட கல்லாப் பெட்டி

ஆம்.. நீங்கள் யூகிப்பது சரிதான்!
பதவி பணம் இவைகளுக்காத்தான் சில போராளிகள் கூட கருங்காலிகளாக மாறுகின்றனர்.

Tuesday, May 24, 2011

பிற மாநில சட்டப் பேரவைக் கட்டிடங்கள்

ஆட்சியைப் பிடித்ததும் ஜெயலலிதா அம்மையாரின் முதல் அதிரடியாக, கலைஞர் பலகோடி செலவில் பார்த்து பார்த்து கட்டிய சட்டப் பேரவையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். அது சரியா தவறா என்ற ஆய்வுக்கு போவதற்கு முன்னால் இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவைக் கட்டிடங்களைப் பார்க்கலாம்.

கேரளா

குஜராத்

உத்திரப் பிரதேசம்

கர்நாடகா

மகாராஷ்டிரா

மேற்கு வங்கம்

ராஜஸ்தான்

மத்தியப் பிரதேசம்

ஆந்திரா

ஒரிஸ்ஸா

பீஹார்

சட்டீஸ்கர்

அஸ்ஸாம்

இமாச்சலப் பிரதேசம்

இயற்கை எழில்மிக்க இமாச்சல பிரதேசப் பேரவையைப் போல நம்ம தமிழ்நாட்டுப் பேரவையை குளு குளுன்னு இருக்குற கொடநாட்டுக்கு மாத்திட்டா என்ன?

Sunday, May 22, 2011

நா.முத்துக்குமார் கவிதைகள்

நா.முத்துக்குமார் எழுதிய 'பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' என்ற நூலிலிருந்து நான் ரசித்த கவிதைகள் உங்களுக்காக

தாமதம்
மாபெரும் அறைகூவலுக்குப் பின்
உலகத் தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்
லெனின் சொன்னான்;
'என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்!'

ஒரு தொப்புள் கொடி
கேள்வி கேட்கிறது

தொழிற்சாலை என்பது
கருவறை போன்றது
தொழிலாளிகள் அதன்
தொப்புள் கொடி போன்றவர்கள்
தொட்டுப் பேசும் உரிமையை
தொப்புள்கொடி கேட்டால்
கருவறை அதற்காக
கதவடைப்பு செய்வதா?

பெயர்ச்சொல்
முப்போகம் பயிர் செய்த தமிழன்
முண்டியடித்து வாங்கிய
ரேஷன் அரிசிக்கு
சரியாகத்தான்
பெயர் வைத்துள்ளான்!
புழுங்கல் அரிசி
ஆம்
'புழு', 'கல்' அரிசி!

வித்தியாசம்
யார் சொன்னது?
ஆலைகளை எல்லாம்
மூடி விட்டார்கள் என்று?
இப்போதும்
பின்னி ஆலையில்
நூல் நூற்கும் பணி
நடந்து கொண்டுதானிருக்கிறது
சின்ன வித்தியாசம்
நூல் நூற்பது
தொழிலாளிகள் அல்ல
சிலந்திகள்!

காரணம்
மாமியார்களுக்கெல்லாம்
மரபுக் கவிதைதான்
அதிகம் பிடிக்கிறது
சீர் கொண்டு வருவதால்!

இது போன்று இன்னும் பல கவிதைகள் அந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படியுங்கள். (எல்லாத்தயும் ஓசியிலேயே படிக்கணும்னு நினைச்சா எப்படி?)

Saturday, May 21, 2011

இடி மின்னல்

கோடை வெயிலில் புளுங்கிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது.

கனிமொழி சிறையில் அடைத்ததற்காக வானமே அழுகிறது என்று சிலரும் இல்லை.. இல்லை வாண வேடிக்கை நிகழ்த்தி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது என்று வேறு சிலரும் வேடிக்கையாக விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

சரி, விஷயத்திற்கு வருவோம். நேற்றைய மழையின்போது இடி மின்னலின் தாக்கம் வீடே அதிரும்படி இருந்தது. இந்த இடி மின்னலைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்த செய்திகளின் தொகுப்புதான் இந்த பதிவு.

மின்னல் உருவாகக் காரணமான மேகம் என்பது புவியில்
மேற்பரப்புக்கு மேல்,
வளிமண்டலத்தில் மிதக்கும் சிறிய
நீர்த்துளிகள் அல்லது உறைந்த
பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த
ஒரு தொகுதியாகும்.

நீராவியானது குளிரும்போது ஒடுங்கி,
மிகச் சிறிய விட்டம் கொண்ட பனித்
துளிகளை உண்டாக்குகிறது.
இது கண்ணுக்குத் தெரியாத
அளவு கொண்டது ஆயினும் பல கோடிக்
கணக்கான துளிகள் ஒன்றாகச்
சேர்ந்து இருக்கும்போது அவற்றைக்
கண்ணால் பார்க்கமுடிகிறது.
இதுவே மேகம் எனப்படுகின்றது.
செறிவானதும், ஆழமானதுமான
மேகங்கள் வரையான கண்ணுக்குப்
புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக்
கற்றைகளை தெறிக்கும்
தன்மை வாய்ந்தவை. இதனால்
மேகங்களின்
மேற்பக்கமாவது வெண்ணிறமாகத்
தெரிவதுண்டு. மேகத்தின்;
அளவு அதிகமாகும்போது உட்புறங்களில்
ஒளி குறைந்துவிடுகிறது. இதன்
காரணமாக மேகத்தின் கீழ்ப்பகுதிகள்
சாம்பல் நிறமாகவோ,
கருநிறமாகவோ இருப்பதுண்டு.

மழைக் காலங்களில் மேகங்களின்
இடையே ஏற்படும் மிகப்பெரிய
தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல்.
கண்ணைப் பறிக்கும்
ஒளி கதிர்களோடு கோடுகளாய் வானில்
நொடிப்பொழுதில் தோன்றி மறையும்
நிகழ்ச்சி தான் மின்னல்.
மின்னலோடு கூட பெரும் சத்தம்
கேட்கும். இதை இடி என்கிறோம்.
மழை மேகங்கள் தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளில்
உராய்ந்து மின்னோட்டம் பெறுகின்றன.
இவ்வாறு சில மேகக் கூட்டங்கள் நேர்
மின்னோட்டமும், சில மேகங்கள் எதிர்
மின்னோட்டமும் பெறுகின்றன. எதிர்
எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக்
கூட்டங்கள் அருகே வரும் பொழுது,
மின்னூட்ட ஈர்ப்பு விசையால்
காற்றின் வழியே மின் ஆற்றல்
பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன.

இவ்வாறு காற்றின்
வழியே மின்னூட்டம் பாயும்
பொழுது தீப்பொறி போல ஒளி தெரிகிறது.
இப்பகுதியில் காற்று மின் மயமாக்கப்
படுகின்றது. சில பொழுதுகளில்
மின்னல்
ஒரு மரத்தையோ நிலத்தையோ மேகங்களில்
சேர்ந்திருந்த மின்னூட்டம்
நிலத்திற்கு பாய்ந்து விடும்.இந்நிகழ்ச்சி இடி விழுந்தது எனப்படுகிறது.

இம்மின்னல் நிலத்தில் உள்ள
விலங்குகளையும், ஆட்களையும் கூட
தாக்கும். இதனால் பலர்
உயிரிழந்து உள்ளனர் . வானில் ஆகாய
விமானத்தில் பறந்து செல்லும்
பொழுதும் இவ்வாறு நிகழும், ஆனால்
சேதம் ஏதும் விளைவிப்பதில்லை

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது , ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்?
1. வானிலையைக் கவனியுங்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்
வாய்ப்பு இருந்தால் வெளியில்
செல்லும்
பயணத்தை ஒத்திவையுங்கள் ,
அல்லது வகைப்படுத்துங்கள்.
வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள்
மழைவிட்ட பின்போ ,
மழை துவங்குவதற்கு முன்போ தான்
நிகழ்கின்றன எனவே , மழை விட்டபின்
ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன்
இருக்கவேண்டும் .
அதுபோலவே மழை வரும்
வாய்ப்பு தெரியும் போதே கவனமாய்
இருக்க வேண்டும் .

3. மின்னலை நாம் பார்ப்பதற்கும்,
தொடரும் இடிச் சத்தத்தைக்
கேட்பதற்கும் இடையேயான
நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய
இடத்தும் இடையேயான தூரத்தைச்
சொல்கிறது . இந்த
இடைவெளி ஐந்து வினாடிகளை விடக்
குறைவெனில் சுமார் ஒரு மைல்
இடைவெளியில் எங்கோ மின்னல்
தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என
கணித்துக் கொள்ளுங்கள் .

4. இடி மின்னல் வேளைகளில், உயரமான
மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக்
கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள்,
உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள்
இவற்றின் அருகே நிற்காதீர்கள் .

5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர்
நிலைகளிலோ, கடற்கரைகளிலோ,
விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள்.
அந்த இடங்களில் உயரமாய்
இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர்
மின்சாரத்தை மேகம் உங்கள்
உடலிலிருந்து ஈர்க்கக் கூடும் .

6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க
நேர்ந்தால் தரையில்
படுக்கவே படுக்காதீர்கள் .
குனிந்து வயல் வரப்பில்
குந்தவைத்து அமர்வது போல
அமருங்கள் . தலையைக் குனித்து கால்
முட்டியில் வையுங்கள். தரைக்கும்
உடலுக்குமான
தொடர்பு எவ்வளவு குறைவாய்
இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ,
அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல்
வெகு அருகில் தாக்கும்
வாய்ப்பு உண்டு என
உணர்ந்துகொள்ளுங்கள் . குழுவாக
இருக்காதீர்கள்
பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.

8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த
நேரத்தில் தொலைபேசியைப்
பயன்படுத்தாதீர்கள் . தொலைபேசியில்
அருகே இருப்பதைத் தவிருங்கள்.
தொலைக்காட்சி, கணினி உட்பட
அனைத்து எலக்ட்ரானிக்
கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க
விடுங்கள் . மின்
இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள்.
கேபிள் டிவியின் கேபிளையும்
கழற்றிவிடுங்கள் .

9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின்
கண்ணாடிகளை முழுவதுமாக
மூடிவிட்டு ஓரமாக
நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள்.
மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின்
அருகே வண்டியை நிறுத்தாமல்
கவனமாய் இருங்கள் .

10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல்
செய்வது , குளிப்பது போன்ற
வேலைகளைச் செய்யாதீர்கள்.
குறிப்பாக திறந்த சன்னல்
அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இடி மின்னலால் நன்மை ஏதேனும் உண்டா?
ஆம்.. உண்டு
இடி மின்னலின் போது காற்றில்
நைட்ரஜன் அதிகமாக
உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில்
விழுகிறது . இது விவசாயத்திற்குப்
பயன்படும் உரமாகி,
விளைச்சலை அதிகரிக்கிறது.
இடி, மின்னல் அதிகமாக
இருக்கும் பகுதிகளில் விளைச்சல்
அதிகமாக இருப்பதைப் பார்க்க
முடியும் .