Sunday, May 22, 2011

நா.முத்துக்குமார் கவிதைகள்

நா.முத்துக்குமார் எழுதிய 'பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' என்ற நூலிலிருந்து நான் ரசித்த கவிதைகள் உங்களுக்காக

தாமதம்
மாபெரும் அறைகூவலுக்குப் பின்
உலகத் தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்
லெனின் சொன்னான்;
'என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்!'

ஒரு தொப்புள் கொடி
கேள்வி கேட்கிறது

தொழிற்சாலை என்பது
கருவறை போன்றது
தொழிலாளிகள் அதன்
தொப்புள் கொடி போன்றவர்கள்
தொட்டுப் பேசும் உரிமையை
தொப்புள்கொடி கேட்டால்
கருவறை அதற்காக
கதவடைப்பு செய்வதா?

பெயர்ச்சொல்
முப்போகம் பயிர் செய்த தமிழன்
முண்டியடித்து வாங்கிய
ரேஷன் அரிசிக்கு
சரியாகத்தான்
பெயர் வைத்துள்ளான்!
புழுங்கல் அரிசி
ஆம்
'புழு', 'கல்' அரிசி!

வித்தியாசம்
யார் சொன்னது?
ஆலைகளை எல்லாம்
மூடி விட்டார்கள் என்று?
இப்போதும்
பின்னி ஆலையில்
நூல் நூற்கும் பணி
நடந்து கொண்டுதானிருக்கிறது
சின்ன வித்தியாசம்
நூல் நூற்பது
தொழிலாளிகள் அல்ல
சிலந்திகள்!

காரணம்
மாமியார்களுக்கெல்லாம்
மரபுக் கவிதைதான்
அதிகம் பிடிக்கிறது
சீர் கொண்டு வருவதால்!

இது போன்று இன்னும் பல கவிதைகள் அந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படியுங்கள். (எல்லாத்தயும் ஓசியிலேயே படிக்கணும்னு நினைச்சா எப்படி?)

No comments:

Post a Comment