Friday, May 18, 2012

கலைந்த மேகம்!

விழி குளிரும்
வெய்யில் ஒளிந்த
குற்றாலம்

விட்டு விட்டு
சாமரம் வீசும்
சாரல் காற்று

காற்றில்..
தவழ்ந்து தவழ்ந்து
மலையைத் தழுவும்
முகில்கள்

முகில்களை..
தாங்கித் தாங்கி
தரையிறக்கும் மலை

மலையில்..
விழுந்து விழுந்து
சிரிக்கும் அருவி

அருவியை..
குனிந்து குனிந்து
வரவேற்கும் தலை

கள்

தலை..
நனைய நனைய
நடுங்கும் பற்களோடு
ஓரமாய் நின்று
ஒவ்வொன்றாய் ரசிக்கும்
நான்


சுளீரென..

சாலையின் திருப்பத்தால்
திசை மாறிய
வெய்யிலின் தாக்கத்தில்
விழித்துக் கொள்கிறேன்
பயணக் கனவிலிருந்து.!

9 comments:

  1. வணக்கம், கவிஞர் தமிழ் மீரான்! பயணக் கனவும் , கண்ட காட்சியைப் பற்றிய சொல்லாடலும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி!

      Delete
  2. இதோ குற்றால சீஸன் வரப்போகிறது.உங்கள் கவிதைப்பார்த்ததும் குற்றாலம் நினைவுக்கு வந்து விட்டது.இறுதியில் கனவாகிப்போனதே:(

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா அக்கா,
      நான் அடுத்த மாதம் ஊருக்குப் போறேன். கனவு நனவாகிடுமே:)

      Delete
  3. இயற்கை எழில் கொஞ்சும் குற்றால அருவி அருமையான் வரிகளில் அழகாக சொன்னீர்கள் சபாஸ்....கனவாகி போனது நெஞ்சை சுட்டது.

    ம் ம் பிடிச்சிருக்கு

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி.,
      நெஞ்சை மட்டுமா? மொத்த உடம்பயும் அடுப்புல விட்டு வாட்டுற மாதிரில்ல இருக்கு சென்னை வெயில்!

      Delete
  4. குற்றாலத்தின்
    நினைவுக் குளியல்
    வேனலிலும் இதமாக

    ம்ம்ம் அடுத்த மாசம் சீசன் ஆரபிச்சிடும்
    நம்ம குற்றாலத்தில குளிக்கிறது அது ஒரு சுகம்தான் சகோ

    நினைவுக் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. செய்தாலி, அடிக்கிற வெய்யிலுக்கு இப்படி நினைவுக் குளியல் போட்டுத்தான் மனதை இதமாக்கிக்க வேண்டியிருக்கு!

      Delete
  5. சுளீரென..

    சாலையின் திருப்பத்தால்
    திசை மாறிய
    வெய்யிலின் தாக்கத்தில்
    விழித்துக் கொள்கிறேன்
    பயணக் கனவிலிருந்து.!

    arumaiyana kanavu..comedy ennana naan kutralam pogum pothey intha mathiri kanavu kaanpen

    ReplyDelete