Wednesday, May 23, 2012

குடி முழுகிப் போச்சி!

அக்கம் பக்கம் வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில் வச்சதயும் திருப்பல

சொத்து பத்து இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி நிலங்கூட இல்ல

சொந்தபந்தம் இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி போன புருஷனோ


எக்கச்சக்கம் குடிச்சதால போதையில
எழுந்திருக்க முடியாம வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த உசுரு கூட
குடி கொள்ள முடியாம முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த பணத்துல

மிச்சமீதி சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட புருசன் வாயில.!

12 comments:

  1. உண்மை ....உண்மை....உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி... நன்றி... நன்றி... சகோ.சதீஷ்!

      Delete
  2. குடிகார கணவணால் பாதிக்கபட்டா பெண்ணின் வேதணையே கூரும் அழகாக கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி Rahmanfayed தங்கள் வருகைக்கு!

      Delete
  3. மிச்சமீதி சடங்குக்கொண்ணும் குறையில்ல
    மிஞ்சியிருந்த அரிசி கூட புருசன் வாயில.!
    ///

    எனன் கொடுமை என்ன கொடுமை...தம்பி மீரான்...அருமையான கருக்களை கையிலெடுத்து கவிதையில் பின்னி பெடல் எடுக்கறீங்க.தொடருங்கள் வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிக்கா அக்கா உங்கள் வாழ்த்துக்கு!

      Delete
  4. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    ReplyDelete
  5. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு


    புதிய வரவுகள்:
    கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
  6. மொழி பெயர்க்க முடியாத துக்கம் ...............மிச்சம் வைத்துதான் செல்கிறான் .....நீண்ட துக்கத்தையும் வலியையும் ...........சமூக வெளிபாடு அருமை நண்பா

    ReplyDelete
  7. அருமையான பதிவு. வாழ்த்துகள் திரு Mohamed Meeran.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  9. அன்பின் தமிழ் மீரான் - சிந்தனை அருமை - குடிகாரக் கணவனின் மனைவி அவனது சாவில் வருந்திப் பேசும் சொற்கள் கவித்தையாகி உள்ளத்தைச் சுடுகிறது - நல்வாழ்த்துகள் தமிழ் மீரான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete