Friday, September 16, 2011

இனிமேலாவது கலையுமா விஜயகாந்தின் மவுனம்?

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதாவது அவருடைய தற்போதைய எம்ஜியார் பாட்டு பாணியில் சொல்வதானால் 'பூனையல்ல புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்' என்று பாடாமல் பாடி இருக்கிறார்.

இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அண்மையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா 'தேமுதிகவினர் எங்களுக்கு ஒன்றும் பாலபாடம் நடத்த வேண்டாம்' எனக் கடுமையாகப் பேசியபோது கூட மவுனம் காத்தது குறிப்பிடத்தக்கது.


தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக. சமச்சீர் கல்வி நிலைப்பாட்டிலிருந்து அண்மையில் நடந்த துப்பாக்கி சூடு வரை இந்த 'கொள்கை'ப் பிடிப்பில் மிக கவனமாக இருந்து அதிமுகவின் குரலாகவே செயல்பட்டது. ஆனால் எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல்
அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில்
ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக. அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

திமுக மற்றும் அதிமுக அணிக்கு மாற்றாக இருப்பார் என்ற எண்ணத்திலேயே மக்கள் தேமுதிகவுக்கு வாக்களித்தனர். ஆனால் பொருப்புமிக்க பதவியான எதிர்கட்சித் தலைவராகியும் கூட இத்தனை நாட்களாக மவுனமாக இருந்தது மக்களுக்கு அதிருப்தியளித்தது. ஒரு காலத்தில் மக்களோடு மட்டுமே கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தற்போது அதிமுக கூட்டணிக்காக மக்களையே மறந்து விட்டாரோ என்று நினைக்குமளவுக்கு ஆகிவிட்டன அவருடை செயல்பாடுகள்.

இனியேனும் அவர் மவுனம் கலையுமா? அல்லது சீட்டு உடன்பாடு ஏற்பட்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் மவுனம் தொடருமா எனத் தெரியவில்லை.

ஏன்னா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!

7 comments:

 1. அதான் கருத்தையும் நீங்களே எழுதீட்டீங்களே
  வேற என்ன நாங்க சொல்லஅதான் கருத்தையும் நீங்களே எழுதீட்டீங்களே
  வேற என்ன நாங்க சொல்ல

  ReplyDelete
 2. பாப்போம் கேப்டேன் என்ன பண்றர்னு

  ReplyDelete
 3. தமிழ் யாளி மற்றும் ராஜா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 4. தலைப்பே தப்பு.இனிமேலாவது மப்பு தெளியுமா?இதுதான் சரி. ஒட்டு போட்ட மக்களுக்காக ஏதாவது தைரியமாக அம்மாகிட்டே குரல் கொடுப்பாரா?துணிச்சல் வருமா?பார்ப்போம்.-வாசன்.

  ReplyDelete
 5. அதெல்லாம் படங்களில் மட்டுமே...

  ReplyDelete
 6. வாசன், Nesan, ஒதிகை மு.க.அழகிரிவேல் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete