Tuesday, March 22, 2011

'நாணய'மான மனிதர்

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் பல்வேறு கூத்துக்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க சுயேச்சைகளும் தங்கள் பங்குக்கு சில்லரைக் காமடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அவற்றில் ஒன்று இதோ:

பல்லாவரம்
தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர்
இனியன் ஜான் போட்டியிடுகிறார் .
இவர், வேட்புமனு தாக்கல்
செய்வதற்காக கலெக்டர்
அலுவலகத்துக்கு நேற்று மதியம்
ஒரு மணிக்கு வந்தார் .
விண்ணப்பத்துடன் டெபாசிட்
தொகையை சில்லரை காசுகளை கொடுத்தார்.
5, 2, 1 ரூபாய் என 10,000
ரூபாய்க்கும்
நாணயங்களை ஒரு துணியில்
கட்டி பிரித்து வைத்தார் .
இதை பார்த்து தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் திகைத்தனர் .

ஒரு மணிக்கு தொடங்கிய
சில்லரைக் காசுகளை எண்ணும்
பணி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது.
இதில் 5 ரூபாய்&1000, 2
ரூபாய்&4000, 1 ரூபாய்&2000 என
10,000 ரூபாய்க்கும் நாணயங்கள்
இருந்தன. சில்லரை காசு குறைந்தால்
மீதியை கொடுப்பதற்கும் ஒரு பையில்
நாணயங்கள் வைத்திருந்தார்.

35 வயதான இனியன் ஜான்
கூறுகையில், '''தேர்தலில்
போட்டியிடுவதற்காக 6 மாதமாக
நண்பர்களுடன்
சேர்ந்து நாணயங்களை சேர்த்தேன்.
அரசியல்வாதிகளிடம் நாணயம்
இல்லை . இதை தெரிந்தாவது அவர்கள்,
நாணயத்துடன் நடந்து கொள்ள
வேண்டும் . இதன்மூலம்
கண்ணியமான பயணமும் அரசியல்
மாற்றமும் ஏற்பட வேண்டும்'' என்றார்.
எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள்
சக்தி இயக்கம் வேட்பாளர் குமார் (26)
பல்லாவரம் தொகுதிக்கு சுயேச்சையாக
போட்டியிடுகிறார் . இவர், சென்னையில்
உள்ள சாப்ட்வேர் கம்பெனியில்
டிசைனிங் இன்ஜினியராக
வேலை செய்கிறார் .
''ஊழலை ஒழிப்பதற்காக தேர்தலில்
போட்டியிடுகிறேன்'' என்று குமார்
கூறினார் .

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

No comments:

Post a Comment