Wednesday, November 10, 2010

கேஸ் சிலிண்டருக்கும் உண்டு காலாவதி தேதி

எல் .பி. ஜி. கேஸ் சிலிண்டருக்கும்காலாவதி தேதி உண்டு, காலாவதியான சிலிண்டரை உபயோகிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
காலாவதியான சிலிண்டரை உபயோகிக்கும்போது அதில் வாயு கசிவுஏற்ப்பட்டு ஆபத்து ஏற்படலாம்.

சரி, காலாவதியான எல்.பி.ஜி.கேஸ் சிலிண்டரை எப்படி கண்டு பிடிக்கலாம்? சிலிண்டரை பிடித்து தூக்கும் இடத்தில் மூன்று செங்குத்தான பட்டிகள் இருக்கும். அதில் ஒன்றில் A, B, C, அல்லது D, என்ற ஆங்கில எழுத்தும் அதனுடன் இரண்டு எண்களும் குறிக்கபபட்டிருக்கும் (எ .கா D06 ).ஆங்கில எழுத்துக்கள் காலாண்டை குறிக்கிறது. மேலும் எந்த காலாண்டு வரை உபயோகிக்கலாம் என்பதையும் குறிக்கிறது.
A என்றால் மார்ச் (முதல் காலாண்டு).
B என்றால் ஜூன் (இரண்டாம் காலாண்டு ).
C என்றால் செப்டம்பர் (மூன்றாம்காலாண்டு).
D என்றால் டிசம்பர் (நான்காம் காலாண்டு )
பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அது எந்த ஆண்டுவரை உபயோகிக்க தகுதியனானது என்பதை குறிக்கிறது. D06 என்றால் டிசம்பர் 2006 வரை உபயோகிக்கலாம்.

இன்னோர் எடுத்துக்காட்டு. C12 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் அது செப்டம்பர் 2012 வரை உபயோகிக்க தகுதியானது.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல். முதலில் சென்று சமையல் அறையில் காஸ் cylinder date பார்த்தேன்.
    நன்றி

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு நன்றி virutcham

    ReplyDelete