சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்
யெஸ். பாலபாரதி
இடுகாடு
நிற்கும் பிணம்
பட்ட மரம்
-திருக்குவளை அறிவழகன்
வயல்வெளிகளில்
நிறைய முளைக்கின்றன
கட்டிடங்கள்
-செல்வ ஸ்டீபன்
உதிர்ந்த சருகுகள்
மீண்டும் கிளையில்
குருவிக்கூடு
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்
-கவிக்கோ அப்துல் ரகுமான்
நடு பகல்
சுடு மணல்
பாவம்.. என் சுவடுகள்
-அறிவுமதி
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு
-குடந்தை அன்புமணி
விடிந்த பிறகும்
மறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்
-பாக்யாவில் பிரசுரமான என் முதல் கவிதை.
நன்றாக இருக்கிறதா?
உங்கள் கருத்துக்களையும் ஹைக்கூக்களையும் எழுதுங்கள் நண்பர்களே
Tweet | ||||||
விடிந்த பிறகும்
ReplyDeleteமறையாத விண்மீன்கள்
குடிசையின் விரிசல்கள்
மிக மிக அற்புதம்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பர் வேல் தர்மா அவர்களே
ReplyDeleteஉங்கள் கவிதை அழகு...
ReplyDeleteதங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களே!
ReplyDeleteஉங்கள் கவிதை அருமை..
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் ரிஷபன்
ReplyDeleteமிக அருமையான கவிதைகள்..
ReplyDeleteஆனால் இவற்றில் சில ஹைக்கூ என்ற இலக்கணத்திற்குள் வராது.. ஹைக்கூ என்ற அடையாளம் இல்லாமலும், ஜொலிக்க கூடிய கவிதைகளை தொகுத்த உங்களுக்கு பாராட்டுகள்.. இந்த தொகுப்பில் , ஹைக்கூ இலக்கணத்துக்குள் வரும் கவிதைகளும் உள்ளன.. அருமை... தமிழால் எதுவும் முடியும் என்பதை இந்த கவிதகள் உணர்த்துகின்றன.. இதில் இடம் பெற்று இருக்கும் அனைத்து கவிஞர்களையும் வணங்கி மகிழ்கிறேன்
நண்பர் பார்வையாளன்,
ReplyDeleteஇவற்றில் எவை ஹைக்கூ இலக்கணத்திற்கு பொருந்தும் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே..
தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி!
//அனைத்து கவிஞர்களையும் வணங்கி மகிழ்கிறேன்//
வாழ்த்தினால் போதுமே,
வணக்கம் இறைவனுக்காகட்டும்!