Thursday, July 28, 2011

வாய்ப்பு-கவிதை

இந்த வார ராணி முத்து இதழில் பிரசுரமான என் கவிதை இது..

=>வாய்ப்பு<=

அதிகம் பேசியதால்

மவுனமானோம் நாம்..

நீயாகப் பேசுவாய் என்று நானும்

நானாகப் பேசுவேன் என்று நீயும்

காத்திருக்கிறோம்!

எப்படியும் வராமலா போய்விடும்

ஒரு மகிழ்ச்சியோ துக்கமோ

நம் மவுனத்தைக் கலைப்பதற்கு?

Friday, June 17, 2011

திகைப்பூட்டும் புகைப்படங்கள்

கின்னஸ் சாதனையாளர் சிலரின் திகைப்பூட்டும் புகைப்படங்கள் இவை

நீளமான இமை முடி

நீண்ட கழுத்து

மிக குண்டானவர்

மிக குள்ளமானவர்

மிக உயரமானவர்

நீண்ட தாடி

பெரிய கண்கள்

மிக அதிகமாக நீட்சியடையும் தோல்

மிகப்பெரிய தாடை

நீண்ட நகங்கள்

Tuesday, June 14, 2011

இணைபிரியா வாழ்க்கை

கடவுள் நமக்கு எத்தகைய சிறந்த வாழ்க்கையை அளித்திருக்கிறார் என்பது பலருக்கு புரிவதில்லை. ஏதோ தனக்கு மட்டும் வாழ்க்கையில் யாருக்கும் நேர்ந்திடாத துன்பம் நேர்ந்துவிட்டதாகப் புலம்பும் நண்பர்ளே, பின்வரும் படங்களைப் பாருங்கள். நம்மால் கற்பனையிலும் நினைக்க முடியாத வாழ்க்கையை எப்படி புன்னகையோடு எதிர்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!

Wednesday, June 8, 2011

கோளுரை

மதியை மதித்தவன்
வானத்தில் ஏறி
மதியை மிதித்து வந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்

வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரில் எழுத்தானாய்

கைகளில்தான் உன்
வருங்காலம் அது
கைகளின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்

கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது? பாவம்
நடந்தான் காட்டுக்கு

காலம் பார்த்து
நடந்ததுதானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்க்
குங்கும அலங்கோலம்

சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்

அழுவது சில நாள்
சிரிப்பது சில நாள்
அனைவர்க்கும் உள்ளதுதான் - கதை
முழுவதும் உனக்கு
முன்னால் தெரிந்தால்
மூச்சில் சுவை ஏது?

-கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய "சுட்டுவிரல்" எனும் நூலிருந்து.

Wednesday, May 25, 2011

கருங்காலி

கருங்காலி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் காட்டிக் கொடுக்கும் கயவர்கள், கூட இருந்து குழி பறிப்போர், நம்பிக்கை துரோகிகள் இதெல்லாம் நம் நினைவுக்கு வரும். கருங்காலி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த ஒரு சிறு ஆய்வு

கருங்காலி என்பது ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு வகை மரம்.

கருங்காலி மரம்

இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.

கருங்காலி மர இலைகள்

அதெல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்புமிக்க கருங்காலி எப்படி துரோகிகளுக்கு அடைமொழியானது என்று கேட்கிறீர்களா?

மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடரி இருக்கிறதல்லவா? அதன் கைப்பிடி உறுதியாக இருப்பதற்காக பெரும்பாலும் இந்த கருங்காலி மரக் கட்டைதான் பயன்படுத்தப்படுகிறதாம். அதாவது தன் இனத்தை அழிப்பதற்கு தானே காரணமாக அமைகிறதாம் இந்த கருங்காலி. இதனால்தான் துரோகிகளுக்கும் இப்பெயர் கூறும் வழக்கம் வந்ததாம்.

காலங்காலமாக இந்த யூதாஸ்களும் எட்டப்பர்களும் தலையெடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம்?
கீழேயுள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

கருங்காலியில் செய்யப்ட்ட நாற்காலி

கருங்காலியில் செய்யப்பட்ட கல்லாப் பெட்டி

ஆம்.. நீங்கள் யூகிப்பது சரிதான்!
பதவி பணம் இவைகளுக்காத்தான் சில போராளிகள் கூட கருங்காலிகளாக மாறுகின்றனர்.