Sunday, May 22, 2011

நா.முத்துக்குமார் கவிதைகள்

நா.முத்துக்குமார் எழுதிய 'பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' என்ற நூலிலிருந்து நான் ரசித்த கவிதைகள் உங்களுக்காக

தாமதம்
மாபெரும் அறைகூவலுக்குப் பின்
உலகத் தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்
லெனின் சொன்னான்;
'என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்!'

ஒரு தொப்புள் கொடி
கேள்வி கேட்கிறது

தொழிற்சாலை என்பது
கருவறை போன்றது
தொழிலாளிகள் அதன்
தொப்புள் கொடி போன்றவர்கள்
தொட்டுப் பேசும் உரிமையை
தொப்புள்கொடி கேட்டால்
கருவறை அதற்காக
கதவடைப்பு செய்வதா?

பெயர்ச்சொல்
முப்போகம் பயிர் செய்த தமிழன்
முண்டியடித்து வாங்கிய
ரேஷன் அரிசிக்கு
சரியாகத்தான்
பெயர் வைத்துள்ளான்!
புழுங்கல் அரிசி
ஆம்
'புழு', 'கல்' அரிசி!

வித்தியாசம்
யார் சொன்னது?
ஆலைகளை எல்லாம்
மூடி விட்டார்கள் என்று?
இப்போதும்
பின்னி ஆலையில்
நூல் நூற்கும் பணி
நடந்து கொண்டுதானிருக்கிறது
சின்ன வித்தியாசம்
நூல் நூற்பது
தொழிலாளிகள் அல்ல
சிலந்திகள்!

காரணம்
மாமியார்களுக்கெல்லாம்
மரபுக் கவிதைதான்
அதிகம் பிடிக்கிறது
சீர் கொண்டு வருவதால்!

இது போன்று இன்னும் பல கவிதைகள் அந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படியுங்கள். (எல்லாத்தயும் ஓசியிலேயே படிக்கணும்னு நினைச்சா எப்படி?)

Saturday, May 21, 2011

இடி மின்னல்

கோடை வெயிலில் புளுங்கிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்தது.

கனிமொழி சிறையில் அடைத்ததற்காக வானமே அழுகிறது என்று சிலரும் இல்லை.. இல்லை வாண வேடிக்கை நிகழ்த்தி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது என்று வேறு சிலரும் வேடிக்கையாக விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

சரி, விஷயத்திற்கு வருவோம். நேற்றைய மழையின்போது இடி மின்னலின் தாக்கம் வீடே அதிரும்படி இருந்தது. இந்த இடி மின்னலைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்த செய்திகளின் தொகுப்புதான் இந்த பதிவு.

மின்னல் உருவாகக் காரணமான மேகம் என்பது புவியில்
மேற்பரப்புக்கு மேல்,
வளிமண்டலத்தில் மிதக்கும் சிறிய
நீர்த்துளிகள் அல்லது உறைந்த
பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த
ஒரு தொகுதியாகும்.

நீராவியானது குளிரும்போது ஒடுங்கி,
மிகச் சிறிய விட்டம் கொண்ட பனித்
துளிகளை உண்டாக்குகிறது.
இது கண்ணுக்குத் தெரியாத
அளவு கொண்டது ஆயினும் பல கோடிக்
கணக்கான துளிகள் ஒன்றாகச்
சேர்ந்து இருக்கும்போது அவற்றைக்
கண்ணால் பார்க்கமுடிகிறது.
இதுவே மேகம் எனப்படுகின்றது.
செறிவானதும், ஆழமானதுமான
மேகங்கள் வரையான கண்ணுக்குப்
புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக்
கற்றைகளை தெறிக்கும்
தன்மை வாய்ந்தவை. இதனால்
மேகங்களின்
மேற்பக்கமாவது வெண்ணிறமாகத்
தெரிவதுண்டு. மேகத்தின்;
அளவு அதிகமாகும்போது உட்புறங்களில்
ஒளி குறைந்துவிடுகிறது. இதன்
காரணமாக மேகத்தின் கீழ்ப்பகுதிகள்
சாம்பல் நிறமாகவோ,
கருநிறமாகவோ இருப்பதுண்டு.

மழைக் காலங்களில் மேகங்களின்
இடையே ஏற்படும் மிகப்பெரிய
தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல்.
கண்ணைப் பறிக்கும்
ஒளி கதிர்களோடு கோடுகளாய் வானில்
நொடிப்பொழுதில் தோன்றி மறையும்
நிகழ்ச்சி தான் மின்னல்.
மின்னலோடு கூட பெரும் சத்தம்
கேட்கும். இதை இடி என்கிறோம்.
மழை மேகங்கள் தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளில்
உராய்ந்து மின்னோட்டம் பெறுகின்றன.
இவ்வாறு சில மேகக் கூட்டங்கள் நேர்
மின்னோட்டமும், சில மேகங்கள் எதிர்
மின்னோட்டமும் பெறுகின்றன. எதிர்
எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக்
கூட்டங்கள் அருகே வரும் பொழுது,
மின்னூட்ட ஈர்ப்பு விசையால்
காற்றின் வழியே மின் ஆற்றல்
பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன.

இவ்வாறு காற்றின்
வழியே மின்னூட்டம் பாயும்
பொழுது தீப்பொறி போல ஒளி தெரிகிறது.
இப்பகுதியில் காற்று மின் மயமாக்கப்
படுகின்றது. சில பொழுதுகளில்
மின்னல்
ஒரு மரத்தையோ நிலத்தையோ மேகங்களில்
சேர்ந்திருந்த மின்னூட்டம்
நிலத்திற்கு பாய்ந்து விடும்.இந்நிகழ்ச்சி இடி விழுந்தது எனப்படுகிறது.

இம்மின்னல் நிலத்தில் உள்ள
விலங்குகளையும், ஆட்களையும் கூட
தாக்கும். இதனால் பலர்
உயிரிழந்து உள்ளனர் . வானில் ஆகாய
விமானத்தில் பறந்து செல்லும்
பொழுதும் இவ்வாறு நிகழும், ஆனால்
சேதம் ஏதும் விளைவிப்பதில்லை

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது , ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும்?
1. வானிலையைக் கவனியுங்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்
வாய்ப்பு இருந்தால் வெளியில்
செல்லும்
பயணத்தை ஒத்திவையுங்கள் ,
அல்லது வகைப்படுத்துங்கள்.
வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள்
மழைவிட்ட பின்போ ,
மழை துவங்குவதற்கு முன்போ தான்
நிகழ்கின்றன எனவே , மழை விட்டபின்
ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன்
இருக்கவேண்டும் .
அதுபோலவே மழை வரும்
வாய்ப்பு தெரியும் போதே கவனமாய்
இருக்க வேண்டும் .

3. மின்னலை நாம் பார்ப்பதற்கும்,
தொடரும் இடிச் சத்தத்தைக்
கேட்பதற்கும் இடையேயான
நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய
இடத்தும் இடையேயான தூரத்தைச்
சொல்கிறது . இந்த
இடைவெளி ஐந்து வினாடிகளை விடக்
குறைவெனில் சுமார் ஒரு மைல்
இடைவெளியில் எங்கோ மின்னல்
தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என
கணித்துக் கொள்ளுங்கள் .

4. இடி மின்னல் வேளைகளில், உயரமான
மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக்
கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள்,
உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள்
இவற்றின் அருகே நிற்காதீர்கள் .

5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர்
நிலைகளிலோ, கடற்கரைகளிலோ,
விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள்.
அந்த இடங்களில் உயரமாய்
இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர்
மின்சாரத்தை மேகம் உங்கள்
உடலிலிருந்து ஈர்க்கக் கூடும் .

6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க
நேர்ந்தால் தரையில்
படுக்கவே படுக்காதீர்கள் .
குனிந்து வயல் வரப்பில்
குந்தவைத்து அமர்வது போல
அமருங்கள் . தலையைக் குனித்து கால்
முட்டியில் வையுங்கள். தரைக்கும்
உடலுக்குமான
தொடர்பு எவ்வளவு குறைவாய்
இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ,
அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல்
வெகு அருகில் தாக்கும்
வாய்ப்பு உண்டு என
உணர்ந்துகொள்ளுங்கள் . குழுவாக
இருக்காதீர்கள்
பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.

8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த
நேரத்தில் தொலைபேசியைப்
பயன்படுத்தாதீர்கள் . தொலைபேசியில்
அருகே இருப்பதைத் தவிருங்கள்.
தொலைக்காட்சி, கணினி உட்பட
அனைத்து எலக்ட்ரானிக்
கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க
விடுங்கள் . மின்
இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள்.
கேபிள் டிவியின் கேபிளையும்
கழற்றிவிடுங்கள் .

9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின்
கண்ணாடிகளை முழுவதுமாக
மூடிவிட்டு ஓரமாக
நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள்.
மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின்
அருகே வண்டியை நிறுத்தாமல்
கவனமாய் இருங்கள் .

10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல்
செய்வது , குளிப்பது போன்ற
வேலைகளைச் செய்யாதீர்கள்.
குறிப்பாக திறந்த சன்னல்
அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இடி மின்னலால் நன்மை ஏதேனும் உண்டா?
ஆம்.. உண்டு
இடி மின்னலின் போது காற்றில்
நைட்ரஜன் அதிகமாக
உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில்
விழுகிறது . இது விவசாயத்திற்குப்
பயன்படும் உரமாகி,
விளைச்சலை அதிகரிக்கிறது.
இடி, மின்னல் அதிகமாக
இருக்கும் பகுதிகளில் விளைச்சல்
அதிகமாக இருப்பதைப் பார்க்க
முடியும் .

Friday, April 29, 2011

அலைப்பேசிக்குத் தேவையான Applications

புதிதாக அலைப்பேசி வாங்கியவுடன் ஏதேனும் Applicationகளைத் தேடும் நண்பர்களுக்காக சிலவற்றைத் தொகுத்துள்ளேன். உங்களுக்குத் தேவையானவற்றின் மீது சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Opera mini V4.2
Opera mini 5.1
இணையப் பக்கங்களை குறிப்பாக தமிழ் தளங்களை இந்த உலவி (Browser) மூலம் எளிதாக பார்க்கலாம்.

UC Browser7.5
இந்த உலவி மூலம் வேகமாக பதிவிறக்கம் செய்ய முடிவதுடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

CrickZenga
கிரிக்கெட் ஸ்கோர்களை உடக்குடன் பார்க்கலாம்


NewsHunt
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் நாளிதழ் செய்திகளை அறிந்து கொள்ள இது உதவும்.

திருக்குறள்
திருக்குறளின் 1330 குறள்களும் அடங்கியுள்ளது. ஒருமுறை பதிவிறக்கம் செய்தால் போதும். அதன் பிறகு பார்க்க GPRS தொடர்பு தேவையில்லை.

Dictionary
ஆங்கில வார்த்தைகளும் அதற்கு ஆங்கிலத்திலேயே பொருளும் அடங்கியது. இதற்கும் GPRS தேவையில்லை.

Google map
உங்கள் ஊர் வீடு உட்பட பூமி முழுவதையும் இதில் நாம் பார்க்கலாம்.

Panini Tamil
இதை நிறுவிக் கொள்வதன் மூலம் அலைப்பேசியில் தமிழில் தட்டச்சு செய்யலாம்

Ngpay
பஸ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு செய்யவும் பல்வேறு வகையான ஷாப்பிங் செய்யவும் ஏற்றது.

Binu
உலகின் பல மொழிகளில் செய்திகள், நூல்கள், dictionary, search என பல்வேறு அம்சங்கள் கொண்ட பொக்கிஷம் என்று சொல்லலாம். தமிழில் தினகரன், மாலைமலர், தினமணி, தினமலர் போன்ற நாளிதழ் செய்திகளை படிக்கலாம்.

Gmail
Gmail account வைத்திருப்பவர்களுக்கு பயன்படும்.

EMI Calculator
வங்கிக் கடனுக்கான EMI கணக்கிடலாம்.

BMI Calculator

Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் இதுவரை

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை இறுதிப் போட்டியை விட ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இரு நாடுகளும் இதுவரை பெற்றுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள்
இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில்
மோதியுள்ளன. இதில் இந்தியா 46 போட்டிகளிலும் பாகிஸ்தான் 69 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்
இந்தியா- 356-9.
2005 , ஏப்ரல் 5ம்
தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த
இப்போட்டியில் இந்தியா,
பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தான் - 344-8.
2004 மார்ச் 13ம் தேதி கராச்சியில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழத்தியது.

மிகவும் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர் இந்தியா - 79
சியாலகோட்டில் 1978ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி நடந்த இப்போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தான் - 87
ஷார்ஜாவில் 1985ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானை 38 ரன்கள்
வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்
பாகிஸ்தான் - 322
மொஹாலியில் 2007ல் நடந்த போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

இந்தியா - 316
1998ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதிகபட்ச ரன் எடுத்தோர்
சச்சின் டெண்டுல்கர் - இந்தியா -
2389 ரன்கள்.

இன்சமாம் உல் ஹக் -பாக். - 2403
ரன்கள்.

அதிகபட்ச தனி நபர் ஸகோர்
எம்.எஸ்.டோணி - இந்தியா - 148
சயீத் அன்வர் - பாக். - 194.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்
இந்தியா - 231 (சச்சின், சித்து)
பாகிஸ்தான்- 230 (சயீத் அன்வர், இஜாஸ்
அகமது)

சிறந்த பந்து வீச்சு
இந்தியா - செளரவ் கங்குலி (16 ரன்கள்
கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது)
பாகிஸ்தான் - ஆக்கிப் ஜாவித் (37 ரன்கள்
கொடுத்து 7 விக்கெட்)

பெரிய வெற்றி வித்தியாசம்
இந்தியா - 2008ல் டாக்காவில் நடந்த
போட்டியில் 140 ரன் வித்தியாசத்தில்
வெற்றி.

பாகிஸ்தான் - 2005ல் டெல்லியில்
150 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

சிறிய வெற்றி வித்தியாசம்
இந்தியா - 4 ரன் வித்தியாசத்தில்
1978ல் குவெட்டா போட்டியில்
வென்றது.

பாகிஸ்தான் - 4 ரன் வித்தியாசத்தில்
1993ல் ஷார்ஜா போட்டியில் வென்றது.

அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள்
இந்தியா - அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத்
தலா 54 விக்கெட்கள்.
வாசிம் அக்ரம் - 60 விக்கெட்கள்.

Saturday, March 26, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இதுவரை..

ஆண்டுவென்ற அணி
ஸ்கோர்
இரண்டாம் அணி
ஸ்கோர்
1975மேற்கிந்தியத் தீவுகள்
291/8(60 ovr)
ஆஸ்திரேலியா
274/10(58.4 ovr)
1979மேற்கிந்தியத் தீவுகள்
286/9(60 ovr)
இங்கிலாந்து
194/10(51 ovr)
1983இந்தியா
183/10(54.4 ovr)
மேற்கிந்தியத் தீவுகள்
140/10(52 ovr)
1987ஆஸ்திரேலியா
253/5 (50 ovr)
இங்கிலாந்து
246/8(50 ovr)
1992பாக்கிஸ்தான்
249/6(50 ovr)
இங்கிலாந்து
227/10(49.2 ovr)
1996இலங்கை
245/3(46.2 ovr)
ஆஸ்திரேலியா
241/7 (50 ovr)
1999ஆஸ்திரேலியா
133/2 (20.1 ovr)
பாக்கிஸ்தான்
132/10(39 ovr)
2003ஆஸ்திரேலியா
359/2 (50 ovr)
இந்தியா
234/10(39.2 ovr)
2007ஆஸ்திரேலியா
281/4 (38 ovr)
இலங்கை
215/8(36 ovr)
2011????