Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் இதுவரை

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை இறுதிப் போட்டியை விட ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இரு நாடுகளும் இதுவரை பெற்றுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள்
இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில்
மோதியுள்ளன. இதில் இந்தியா 46 போட்டிகளிலும் பாகிஸ்தான் 69 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்
இந்தியா- 356-9.
2005 , ஏப்ரல் 5ம்
தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த
இப்போட்டியில் இந்தியா,
பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தான் - 344-8.
2004 மார்ச் 13ம் தேதி கராச்சியில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழத்தியது.

மிகவும் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர் இந்தியா - 79
சியாலகோட்டில் 1978ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி நடந்த இப்போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தான் - 87
ஷார்ஜாவில் 1985ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானை 38 ரன்கள்
வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்
பாகிஸ்தான் - 322
மொஹாலியில் 2007ல் நடந்த போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

இந்தியா - 316
1998ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதிகபட்ச ரன் எடுத்தோர்
சச்சின் டெண்டுல்கர் - இந்தியா -
2389 ரன்கள்.

இன்சமாம் உல் ஹக் -பாக். - 2403
ரன்கள்.

அதிகபட்ச தனி நபர் ஸகோர்
எம்.எஸ்.டோணி - இந்தியா - 148
சயீத் அன்வர் - பாக். - 194.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்
இந்தியா - 231 (சச்சின், சித்து)
பாகிஸ்தான்- 230 (சயீத் அன்வர், இஜாஸ்
அகமது)

சிறந்த பந்து வீச்சு
இந்தியா - செளரவ் கங்குலி (16 ரன்கள்
கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது)
பாகிஸ்தான் - ஆக்கிப் ஜாவித் (37 ரன்கள்
கொடுத்து 7 விக்கெட்)

பெரிய வெற்றி வித்தியாசம்
இந்தியா - 2008ல் டாக்காவில் நடந்த
போட்டியில் 140 ரன் வித்தியாசத்தில்
வெற்றி.

பாகிஸ்தான் - 2005ல் டெல்லியில்
150 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

சிறிய வெற்றி வித்தியாசம்
இந்தியா - 4 ரன் வித்தியாசத்தில்
1978ல் குவெட்டா போட்டியில்
வென்றது.

பாகிஸ்தான் - 4 ரன் வித்தியாசத்தில்
1993ல் ஷார்ஜா போட்டியில் வென்றது.

அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள்
இந்தியா - அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத்
தலா 54 விக்கெட்கள்.
வாசிம் அக்ரம் - 60 விக்கெட்கள்.

Saturday, March 26, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இதுவரை..

ஆண்டுவென்ற அணி
ஸ்கோர்
இரண்டாம் அணி
ஸ்கோர்
1975மேற்கிந்தியத் தீவுகள்
291/8(60 ovr)
ஆஸ்திரேலியா
274/10(58.4 ovr)
1979மேற்கிந்தியத் தீவுகள்
286/9(60 ovr)
இங்கிலாந்து
194/10(51 ovr)
1983இந்தியா
183/10(54.4 ovr)
மேற்கிந்தியத் தீவுகள்
140/10(52 ovr)
1987ஆஸ்திரேலியா
253/5 (50 ovr)
இங்கிலாந்து
246/8(50 ovr)
1992பாக்கிஸ்தான்
249/6(50 ovr)
இங்கிலாந்து
227/10(49.2 ovr)
1996இலங்கை
245/3(46.2 ovr)
ஆஸ்திரேலியா
241/7 (50 ovr)
1999ஆஸ்திரேலியா
133/2 (20.1 ovr)
பாக்கிஸ்தான்
132/10(39 ovr)
2003ஆஸ்திரேலியா
359/2 (50 ovr)
இந்தியா
234/10(39.2 ovr)
2007ஆஸ்திரேலியா
281/4 (38 ovr)
இலங்கை
215/8(36 ovr)
2011????

Tuesday, March 22, 2011

'நாணய'மான மனிதர்

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் பல்வேறு கூத்துக்களை அரங்கேற்றிக் கொண்டிருக்க சுயேச்சைகளும் தங்கள் பங்குக்கு சில்லரைக் காமடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அவற்றில் ஒன்று இதோ:

பல்லாவரம்
தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர்
இனியன் ஜான் போட்டியிடுகிறார் .
இவர், வேட்புமனு தாக்கல்
செய்வதற்காக கலெக்டர்
அலுவலகத்துக்கு நேற்று மதியம்
ஒரு மணிக்கு வந்தார் .
விண்ணப்பத்துடன் டெபாசிட்
தொகையை சில்லரை காசுகளை கொடுத்தார்.
5, 2, 1 ரூபாய் என 10,000
ரூபாய்க்கும்
நாணயங்களை ஒரு துணியில்
கட்டி பிரித்து வைத்தார் .
இதை பார்த்து தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் திகைத்தனர் .

ஒரு மணிக்கு தொடங்கிய
சில்லரைக் காசுகளை எண்ணும்
பணி பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது.
இதில் 5 ரூபாய்&1000, 2
ரூபாய்&4000, 1 ரூபாய்&2000 என
10,000 ரூபாய்க்கும் நாணயங்கள்
இருந்தன. சில்லரை காசு குறைந்தால்
மீதியை கொடுப்பதற்கும் ஒரு பையில்
நாணயங்கள் வைத்திருந்தார்.

35 வயதான இனியன் ஜான்
கூறுகையில், '''தேர்தலில்
போட்டியிடுவதற்காக 6 மாதமாக
நண்பர்களுடன்
சேர்ந்து நாணயங்களை சேர்த்தேன்.
அரசியல்வாதிகளிடம் நாணயம்
இல்லை . இதை தெரிந்தாவது அவர்கள்,
நாணயத்துடன் நடந்து கொள்ள
வேண்டும் . இதன்மூலம்
கண்ணியமான பயணமும் அரசியல்
மாற்றமும் ஏற்பட வேண்டும்'' என்றார்.
எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள்
சக்தி இயக்கம் வேட்பாளர் குமார் (26)
பல்லாவரம் தொகுதிக்கு சுயேச்சையாக
போட்டியிடுகிறார் . இவர், சென்னையில்
உள்ள சாப்ட்வேர் கம்பெனியில்
டிசைனிங் இன்ஜினியராக
வேலை செய்கிறார் .
''ஊழலை ஒழிப்பதற்காக தேர்தலில்
போட்டியிடுகிறேன்'' என்று குமார்
கூறினார் .

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

Sunday, March 20, 2011

tamilnadu234

தமிழ்நாட்டில் உள்ள 234 சடடமன்ற தொகுதிகளும் பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக பட்டியல் இங்கே.

1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி
1. திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்
4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்

3. தென் சென்னை பாராளுமன்ற
தொகுதி
1. விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்

4. மத்திய சென்னை பாராளுமன்ற
தொகுதி
1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்

5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற
தொகுதி
1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்

6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்

7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி
1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு

8. வேலூர் பாராளுமன்ற தொகுதி
1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி

9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி
1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி

10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி
1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்

11. திருவண்ணாமலை பாராளுமன்ற
தொகுதி
1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்

12. ஆரணி பாராளுமன்ற தொகுதி
1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்

13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை

14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற
தொகுதி
1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

15. சேலம் பாராளுமன்ற தொகுதி
1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி

16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி
1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி -
பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு

17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி
1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்

18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி
1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)

19. நீலகிரி (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி

20. கோயம்புத்தூர் பாராளுமன்ற
தொகுதி
1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்

21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி
1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்

22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி
1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்

23. கரூர் பாராளுமன்ற தொகுதி
1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை

24. திருச்சி பாராளுமன்ற தொகுதி
1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை

25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)

26. கடலூர் பாராளுமன்ற தொகுதி
1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி

27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)

28. மயிலாடுதுறை பாராளுமன்ற
தொகுதி
1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்

29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்

30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி
1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி

31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி
1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)

32. மதுரை பாராளுமன்ற தொகுதி
1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு

33. தேனி பாராளுமன்ற தொகுதி
1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்

34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி
1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை

35. ராமநாதபுரம் பாராளுமன்ற
தொகுதி
1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி
1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி

37. தென்காசி (தனி) பாராளுமன்ற
தொகுதி
1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி

38. திருநெல்வேலி பாராளுமன்ற
தொகுதி
1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்

39. கன்னியாகுமரி பாராளுமன்ற
தொகுதி
1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

Thursday, March 3, 2011

அலைப்பேசிக்குத் தேவையான Applications

புதிதாக அலைப்பேசி வாங்கியவுடன் ஏதேனும் Applicationகளைத் தேடும் நண்பர்களுக்காக சிலவற்றைத் தொகுத்துள்ளேன். உங்களுக்குத் தேவையானவற்றின் மீது சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Opera mini V4.2
இணையப் பக்கங்களை குறிப்பாக தமிழ் தளங்களை இந்த உலவி (Browser) மூலம் எளிதாக பார்க்கலாம்.

UC Browser7.5
இந்த உலவி மூலம் வேகமாக பதிவிறக்கம் செய்வதுடன் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

CrickZenga
கிரிக்கெட் ஸ்கோர்களை உடக்குடன் பார்க்கலாம்

NewsHunt
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் நாளிதழ் செய்திகளை அறிந்து கொள்ள இது உதவும்.

திருக்குறள்
திருக்குறளின் 1330 குறள்களும் அதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது. ஒருமுறை பதிவிறக்கம் செய்தால் போதும். அதன் பிறகு பார்க்க GPRS தொடர்பு தேவையில்லை.

Dictionary
ஆங்கில வார்த்தைகளும் அதற்கு ஆங்கிலத்திலேயே பொருளும் அடங்கியது. இதற்கும் GPRS தேவையில்லை.

Google map
உங்கள் ஊர் வீடு உட்பட பூமி முழுவதையும் இதில் நாம் பார்க்கலாம்.

Ngpay
eBuddy
Binu
Gmail